Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM
இந்த தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பால் ஊழல் அரசியல்வாதிகள் பயப்பட வேண்டும் என்று போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.
போடி தொகுதிக்குட்பட்ட கோவிந்தநகரம் கிராமத்தில் அவர் பேசியதாவது: இந்த சிறிய கிராமத்தில் சாக்கடை, சாலை வசதி உட்பட 16 தேவை களை பட்டியலாகக் கொடுத்திருக் கிறார்கள். இதை கவுன்சிலர் அள வில் செய்திருக்கலாம். ஆனால், 10 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இதைக்கூட செய்யவில்லை.
நீங்கள் வாக்களித்ததால் அவ ருக்கு பதவி, மரியாதை, சொகுசு வாழ்க்கை கிடைத்துள்ளது. ஆனால், வெற்றிபெற்றதும் உங் களை அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் இம்முறை மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டு திமுகவுக்குத்தான் வாக்க ளிப்போம் என்கின்றனர்.
பணம் இருப்பவர்கள்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றால் டாட்டா, பிர்லாதான் வேட்பாளர்களாக நிற்க முடியும். சாதாரண மக்களும் தேர்தலில் போட்டியிட வேண்டும். வாக்குக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றால் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். நான் வெற்றிபெற்று 5 ஆண்டுகள் இப்பகுதிக்கு வராமல் இருந்தால் அடுத்த தேர்தலில் எனக்கு வாக்களிக்காதீர்கள். ஓ. பன்னீர்செல்வம் போல எனக்கு நடிக்கத் தெரியாது. தெரிந்தி ருந்தால் நானும் கோடிக்கணக்கில் சம்பாதித்து செட்டில் ஆகி இருப் பேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்றால் ஊழலை எப் படித் தடுக்க முடியும். ரூ.2-க்கு வெண்டைக்காய் வாங்கினாலே ஒடித்து பார்த்து சோதித்து வாங்குகிறீர்கள். 5 ஆண்டுகள் ஆளப்போகும் வேட்பாளரை ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.
சொத்து சேர்ப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இன்றைக்கு நோயும், சாவும் எப்போது, யாருக்கு வரும் என்றே கணிக்க முடியவில்லை. இறந்த பிறகு எதையும் தூக்கிக் கொண்டு செல்ல முடியாது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். உங்களின் தீர்ப்பினால் ஊழல் அரசியல்வாதிகள் பயப்பட வேண்டும். வெற்றி பெற்றதும் தொகுதியிலே தங்கி பணிபுரிவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேனி ஒன்றியச் செயலாளர் சக்கரவர்த்தி, கிளைச் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து லட்சுமிபுரம், குப்பி நாயக்கன் பட்டி, ஜங்கால் பட்டி,வெங்கடாசலபுரம், தாடிச் சேரி, தப்புக்குண்டு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT