Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
ஓட்டுக்கு டோக்கன் கொண்டுவந்தது டி.டி.வி.தினகரன் தான் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக ராஜபாளையத்திலும், இ.எம்.மான்ராஜுக்கு ஆதரவாக ஸ்ரீவில்லி புத்தூரிலும், லட்சுமி கணேசனுக்கு ஆதரவாக சிவகாசியிலும், ஆர்.கே.ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக சாத்தூரிலும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம் செய் தார்.
அப்போது விந்தியா பேசிய தாவது: செருப்புக்கு டோக்கன் கொடுத்துப் பார்த்துள்ளேன். ஆனால், ஓட்டுக்கு டோக்கன் கொண்டு வந்தது டி.டி.வி.தினகரன் தான். தற்போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பெயரில் அவர் சுற்றி வருகிறார். ஆனால் உண்மையில் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்றுதான் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து பழநியில் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரனை ஆதரித்து விந்தியா பேசியதாவது:
திமுகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதை செய்யவில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகை, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் வழங்கி சாதித்துக் காட்டியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் 6 இலவச சிலிண்டர்கள், அரசு வேலை, பெண்களுக்கு உதவித் தொகை தருவதாகக் கூறியுள்ளார். அனைத்தையும் முதல்வர் உறுதியாக செய்வார். நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகளையும், ஜெருசேலம் செல்ல உதவித் தொகையும், கோயில்களில் அன்னதானமும் வழங்கி சமூக நீதி காத்தவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT