Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 2 நாட்கள் ரயில் சேவை மாற்றம்: 44 ரயில்கள் பல்லாவரம் வரை இயக்கம்

சென்னை

தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்றும், நாளையும் மின்சாரரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 44 ரயில்கள் இன்று பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிய கால அட்டவணை

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய பாதைஅமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் -அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்சேவையில் 20, 21-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) மாற்றம்செய்யப்பட்டுள்ளது. வழக்கமான ரயில்களின் சேவை குறைக்கப்பட்டு, திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரயில்களுக்கான புதியகால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (20-ம் தேதி)சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு 44 ரயில்கள், தாம்பரத்துக்கு 30, செங்கல்பட்டுக்கு 23, அரக்கோணம் - செங்கல்பட்டு 6, திருமால்பூர் - செங்கல்பட்டு 1, பல்லாவரம் - கடற்கரை 44,தாம்பரம் - கடற்கரை 33, செங்கல்பட்டு - கடற்கரை - 23, செங்கல்பட்டு - அரக்கோணம் 6, செங்கல்பட்டு - திருமால்பூர் 1 என மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல, நாளை (21-ம் தேதி) சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு 32,தாம்பரத்துக்கு 24, செங்கல்பட்டுக்கு 11, பல்லாவரம் - கடற்கரை 33, தாம்பரம் - கடற்கரை 25, செங்கல்பட்டு - கடற்கரை 12 என மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது பாதை அமைப்பதால் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x