Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் களப்பணி அவசியம் ; திமுக - விசிகவின் ஒற்றுமையே வெற்றிக்கு வழி: கட்சி நிர்வாகிகளுக்கு எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுரை

காட்டுமன்னார்கோவிலில் திமுக கூட்டணிக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வனை அறிமுகப்படுத்தி பேசினார்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் விடுதலைச்சிறுத்தை கள் கட்சி சார்பில் வேட்பாளராக சிந்தனை செல்வன் அறிவிக்கப்பட் டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காட்டுமன்னார்கோவிலில் திமுக கூட்டணிக்கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, திமுக முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர் கணேசமூர்த்தி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விவசாய அணி நிர்வாகி பசுமை வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பிரகாஷ் மற்றும் கூட் டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வன் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான செயல்பாடுகள் குறித்த ஆலோசனையும் செய்யப் பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய எம்ஆர்கே. பன்னீர்செல்வம், “இந் தத் தொகுதி வெற்றி வேட்பாளராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனைச்செல்வனை அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாம் ஒற்றுமையாக இருந்து இவரை வெற்றி பெற செய்ய வேண்டும். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தான் எனக்கு மரியாதை. ஒவ்வொரு தொகுதியும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளது. லால் பேட்டை இஸ்லாமியர்கள் காட்டு மன்னார்கோவில் தொகுதியில் சிந்தனைச்செல்வனை ஆதரிக்க வேண்டும்.

அப்படிசெய்தால்தான் சிதம்பரத்தில் விடுதலைச்சிறுத் தைகள் கட்சியினர் அவர்களை ஆதரிப்பார்கள். அதே போல்திமுகவினர் சிந்தனை செல்வனுக் காக தீவிர களப் பணியாற்ற வேண்டும். குறிஞ்சிப்பாடியில் என்னை விடுதலைச்சிறுத்தைகள் ஆதரிக்க வேண்டும். திமுகவினர்தீவிரமாக தேர்தல் பணியாற்று வார்கள். அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x