Published : 17 Mar 2021 03:16 AM
Last Updated : 17 Mar 2021 03:16 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும் விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

வாலாஜா பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.காந்திக்கு நேற்று வாக்கு சேகரித்த அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.படம்: வி.எம்.மணிநாதன்.

ராணிப்பேட்டை

திமுக ஆட்சிக்கு வந்தால் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும் என திமுக இளைஞரணி மாநில செய லாளர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் ஆர்.காந்திக்கு ஆதரவாக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேனில் இருந்தபடி அவர் பேசும்போது, ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை நீங்கள் எல்லாம் சேர்ந்து ஓட, ஓட அடித்து விரட்டினீர்கள். அந்த கோபம் மோடிக்கு தமிழகம் மீது இருக்கிறது. அதனால்தான் ஜிஎஸ்டி வரியில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியை நமக்கு வழங்கவில்லை. அது நமது பணம். கேட்டால் நிதி பற்றாக்குறை என்று சொல்கிறார்கள்.

ஆனால், கரோனா காலத்தில் மோடி மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் 2 சொகுசு விமானங்களை வாங்கி இருக்கிறார். ஏற்கெனவே ஒரு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது ரூ.10 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறார்கள்.

தமிழகத்தில் ‘நீட்' தேர்வை அறவே ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் அறிவிப்பு வெளி யிட்டார். இப்போது, ‘நீட்' தேர்வை எதிர்ப்போம் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால், மருத்துவம் மட்டும் இல்லை. நாம் அதிகம் படிக்கும் செவிலியர் படிப்புக்கும் ‘நீட்' தேர்வு வைக் கிறார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை நாம் மறக்கக்கூடாது.

எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள். அதற்கு ஒரே வழி இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. மறக்காமல் திமுகவுக்கு வாக் களிக்க வேண்டும். அதிமுகவினர் உங்களிடம் வாக்கு கேட்க வரு வார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேளுங்க. ஜெய லலிதா எப்படி உயிரிழந்தார் என கேளுங்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை வெளி வந்துள்ளது. காஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் லிட்டருக்கு 5, டீசல் லிட்டருக்கு ரூ.4 விலை குறைப்புடன் பால் விலையும் 3 ரூபாய் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்துக்கு விடிவுகாலம் வர திமுக வுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x