Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM
சிவகங்கை அருகே தமராக்கியில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஜி.பாஸ்கரனுக்கு தமராக்கி மட்டுமின்றி அக்கிராமத்தைச் சுற்றி யுள்ள ஊர்களிலும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இதனால் அவர் 2011 உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு தரப்பினர் ஆதரவோடு ஒன்றியக் கவுன்சிலராகத் தேர் வாகி அதன்பின் ஒன்றியக் குழுத் தலைவரானார்.
மேலும், தமராக்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங் களில் காங்கிரஸ் வலுவாக இருந்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஸ்கரனுக்கு அதிமு கவில் சீட் கொடுத்ததும், காங்கி ரஸ் கட்சியினர் பெரும்பாலானோர் அவருக்காக அதிமுகவில் இணைந்தனர்.
போராட்டம்
அப்பகுதியில் பாஸ்கரனின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சியில் இருந்த போதிலும் பாஸ்கரனுக்கு ஆதர வாக தேர்தலில் வேலை செய்தனர். இதனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மேப்பல் ம.சக்தி (எ) சத்தியநாதனைக் காட்டிலும் 6,636 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். அதுவே அவர் வெற்றிபெற உதவியாக இருந்தது. ஆனால், 2021 தேர்தலில் பாஸ்கரனுக்கு சீட் கொடுக்காததைக் கண்டித்து அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பலர் நேற்று சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவுக்கு சிக்கல்
அதேபோல் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட சிவகங்கை வடக்கு ஒன்றியம், கல்லல் ஒன்றியம், காளையார்கோவில் வடக்கு ஒன்றியத்தில் அமமுக வலுவாக உள்ளது. அவர்களும் தேர்தலில் களம் காண்கின்றனர். ஜி.பாஸ்கரனுக்கு சீட் மறுப்பு, அமமுக செல்வாக்கால் 40 கிரா மங்களில் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT