Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொலைபேசி எண்கள் வெளியீடு: மின்னஞ்சல் முகவரியும் அறிவிப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ஜி.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 94454 61753, 04175 – 232260, 04188 – 222226 மற்றும் ro.chengam@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட் சியர் வீ.வெற்றிவேல் நியமிக்கப் பட்டுள்ளார். திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 94450 00420, 04175 – 252432, 252433 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், ro.tiruvannamalai@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் மற்றும் தகவல்களை தெரிவிக் கலாம்.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக திருவண்ணாமலை கலால் உதவி ஆணையர் கே.கண்ணன் நியமிக்கப்பட் டுள்ளார். கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 94440 61790, 04175 – 232260, 242055 ஆகிய எண்களையும், ro.kilpennathur@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள் ளார். கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 80728 94244, 04175 – 232915, 04181-241050 மற்றும் ro.kalasapakkam@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

போளூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவ லராக திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எம்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம் 94450 00193, 04175 – 233063 – 04181 – 222023 மற்றும் ro.polur@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவ லராக கோட்டாட்சியர் ஆர்.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். ஆரணி வருவாய் கோட்ட அலு வலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 88831 99188, 04173 – 290020, 226998 மற்றும் ro.arni@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியர் ந.விஜயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு வருவாய் கோட்ட அலுவலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 94450 00419, 04182 – 222235, 222233 மற்றும் ro.cheyyar@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தி.மலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.கீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள் ளார். வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில், அவரது அலுவலகம் உள்ளது. இவரிடம், 94451 64756, 04175 – 232206, 04183 – 225065 மற்றும் ro.vandavasi@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் மற்றும் தகவலை தெரிவிக்கலாம்.

மேலும், 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் – 1950 மற்றும் 18004255672 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தங்களது அலுவலகத்தில் இருந்து பணியை கவனித்து வந்தனர். மேலும், அவர்களது அலுவலகத்துக்கு வந்து வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் (கோட்டாட்சியர் அலுவலகங்களை தவிர்த்து) தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இதன்மூலம் தொலை தூரத்தில் இருந்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் அலுவலகம் அமைந் துள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு வேட்பாளர்களின் வருகை தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x