Published : 24 Jun 2014 09:30 AM
Last Updated : 24 Jun 2014 09:30 AM

தமிழக காங்கிரஸுக்கு சுதந்திரம் வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீர் போர்க்கொடி

மக்களுக்கான போராட்டங்களைக் கையிலெடுத்து, கட்சியை வலுப்படுத்த தமிழக காங் கிரஸுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். கட்சி மேலிடத்துக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கியிருப்பது, காங்கிரஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய முன்னாள் உறுப் பினர் லதா பிரியகுமாரின் முதலா மாண்டு நினைவு அஞ்சலிக் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர், லதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் ஞானதேசிகன் பேசியதாவது:

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்துக் குள் டீசல் விலை, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் கட்டண உயர்வை எதிர்த்து, போராட் டங்கள் நடத்தியோர், தற்போது வெறும் அறிக்கையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதி வெளி யிட்ட அறிக்கையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போன்று, பாஜகவும் கட்டண உயர்வு செய் வதாக கூறியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஒன்பது ஆண்டு காலம் திமுகவும் பங்கு வகித்தது. அப்படியென்றால் திமுகவுக்கு இதில் பொறுப்பு உண்டு என்பதை கருணாநிதி ஏற்றுக் கொள்வாரா? இவ்வாறு ஞானதேசிகன் பேசினார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘ரயில் கட்டண உயர்வை எதிர்த்து நடக்க வுள்ள போராட்டத்தில், தமிழகம் முழுவதும் காங்கிரஸார் திரளாக பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

இரண்டு திராவிடக் கட்சிகளால்தான் தமிழகத்துக்கு கேடு விளைந்துள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ கத்தில் திராவிடக் கட்சிகளுக்கான இடம் விரைவில் வெற்றிடமாகும். அதை காங்கிரஸ்தான் பூர்த்தி செய்ய வேண்டும்.

தேர்தல் தோல்விக்காக துக்கம் அனுசரித்ததுபோதும். கட்சி வளர்ச்சி, நாட்டு வளர்ச்சிப் பணி களுக்கு தயாராக வேண்டும். டெல்லியில் இருந்து சொல்லட்டும் என்று காத்திருக்க வேண்டாம். அவர்கள் எதுவும் சொல்ல மாட் டார்கள். சரியான நேரத்தில் முடிவும் எடுக்க மாட்டார்கள். நாமே சில விஷயங்களை முடிவு செய்துகொள்ள வேண்டும். புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும்.

டெல்லியில் உள்ளவர்கள், ஒரு சில மாநிலங்களை அடகு வைத்தாவது நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், மாநில நலனைக் காக்கும் கட்சிகளே மக்கள் மத்தியில் எப்போதும் வெற்றி பெறும். இங்கே ஒன்றிய நிர் வாகிகள் நியமனத்துக்குகூட மாநிலத் தலைமைக்கு சுதந்திரம் இல்லை. எனவே, மாநிலத்தில் உள்ளவர்களுக்கு மேலிடம் சுதந்திரம் வழங்க வேண்டும். இங்கே இருப்பவருக்குத்தான், மாநிலத்தில் என்ன நடக்கிறது, யாருடன் கூட்டணி வைத்தால் நல்லது என்பதெல்லாம் தெரி யும். மேலிடத்தில் எந்த ஒரு முடிவெடுத்தாலும் மாநிலத் தலை மையையும் கேட்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதற்கு, ஆய்வுக் கூட்டம் நடத்துகின்றனர். ஆனால், இங்கே 1967-க்குப் பின் காங்கிரஸால் ஆட்சிக்கு வரமுடியவில்லையே என்பதை ஆய்வு செய்தார்களா? எனவே, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர, இங்குள்ள வெற்றிடத்தை பூர்த்தி செய்ய காங்கிரஸார் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x