Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதையொட்டி தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்க வசதியாக மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, "திருப்பத்தூர் மாவட் டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக இலவச அழைப்பு எண் -1800 425 5671 மற்றும் 04179-222022. மேலும் வாட்ஸ் -அப் எண்- 94987-47580 ஆகும். தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது 24 மணி நேரமும் செயல்படும். எனவே, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்தும், அரசியல் கட்சியினரின் விதி மீறில்கள் குறித்தும் எந்த நேரத்திலும் தயங்காமல் புகார் அளிக்கலாம்.
மேலும், வாக்காளர் பட்டியல் மற்றும் இதர தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் குறித்து 1950 என்ற தேர்தல் ஆணையத்தின் இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இது தவிர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் காவல் துறை கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது. அதற்கான எண் 94429-92526 ஆகும். 24 மணி நேரமும் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படும். இதிலும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்’’. என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT