Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
திருப்பத்தூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பு டையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வானவராயன் (30) நேற்று முன் தினம் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். முன்விரோத தகராறில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பத் தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், கொலையாளிகள் யாரென அடையாளம் தெரிந்தும் காவல் துறையினர் அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கவில்லை என வானவ ராயனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையே, பிரேதப் பரிசோதனைக்காக வானவராயன் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அவரது உறவினர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நகர காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். அப்போது வான வராயனின் உறவினர்கள், "கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மாட்டோம். மீண்டும் போராட்டத்தில் ஈடுபடு வோம்" எனக்கூறிவிட்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT