Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

இலக்கிய கூட்டத்துக்கு பணம் தந்தாவது இளைஞர்களை வரவழைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா பேச்சு

அ.அன்வர்ராஜா

ராமநாதபுரம்

அரசியல் கட்சியினரின் பொதுக் கூட்டங்களுக்கு ரூ.200 கொடுத்து ஆட்களை கூட்டுவது போல, இலக்கியக் கூட்டங்களில் பணம் கொடுத்தாவது இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் அ.அன் வர்ராஜா பேசினார்.

ராமநாதபுரத்தில் கம்பன் கழக நிறுவனத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ. சுந்தரராஜன் எழுதிய ‘வாலி தன்னை இழந்தானா' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா, நூலை வெளி யிட்டுப் பேசியதாவது: அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கம் பருக்கு சிலை வைத்தார். அவரிடம் அப்பருக்கும் சிலை வைக்கும்படி குன்றக்குடி அடிகளார் கோரிக்கை வைத்தார். அப்போது அண்ணா, வணக்கத்துக்குரியவர் கம்பர் என்பதால் அவருக்கு சிலை வைத்தோம். வழிபாட்டுக்கு உரி யவரான அப்பர் சிலையை கோயி லுக்குள்ளேதான் வைக்க வேண்டும் என்றார்.

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் கம்ப ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங் களைக் கொண்டுசென்று சேர்ப்பது அவசியம். அரசியல்கட்சியினர் ரூ.200 கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைப்பதுபோல, இலக்கியக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்தாவது இளைஞர்களை அழைக்க வேண்டும். பின்னர் அவர்களாகவே வரத் தொடங்கி விடுவர். திராவிட இயக்கம் சார்பில் கம்ப ராமாயணத்தை எரிக் கும் போராட்டம் நடத்தினாலும், அக் காப்பியத்தை அவர்கள் வெறுக்க வில்லை.

ராமாயணத்தில் வாலியை வீழ்த்த சுக்ரீவன், ராமன் கூட்டணி தேவைப்பட்டதுபோல தற்போது தமிழகத்தில் ராமாயணக் கூட்டணி அமைந்துள்ளது. அக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடியாத நிலை உள்ளது.

வாலி வதம் நடந்ததுபோல ராமாயணக் கூட்டணியே வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முத்தமிழ் மன்ற கவு ரவத் தலைவர் மு.மானுடப்பிரி யன் நூலாய்வு உரையாற்றினார். வர்த்தக சங்கத் தலைவர் பி.ஜெகதீசன், தொழிலதிபர் பா.வெங்கடசுப்பு, கம்பன் கழக இணைச்செயலர் ச.இளமதிபானு கோபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பன் கழகச்செயலாளர் கு.விவேகானந்தன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x