Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் இனி ஞாயிறுதோறும் 410 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் சென்னைமற்றும் புறநகர் பகுதிகளுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கான நேரக்கட்டுப்பாடு இருந்து வருகிறது. அதேநேரத்தில் ரயில்வே ஊழியர்கள், வங்கிகள், காப்பீடு,பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பயணிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் 620-க்கும் மேற்பட்ட மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறுகளில் மின்சார ரயில்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர். இதற்கிடையே, இன்று முதல் இனி ஞாயிறுதோறும் மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இன்று முதல்அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 401 மின்சார ரயில்கள்இயக்கப்படவுள்ளன. அதன்படி,சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் தடத்தில் 147, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் 66, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 136, வேளச்சேரி தடத்தில் 52 என மின்சாரரயில்கள் இயக்கப்படும். இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே அனைத்து தேசிய விடுமுறை நாட்களிலும் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT