Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM

அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்களை குறை சொல்வதே திமுகவின் வாடிக்கையாக உள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

வேலூர்/ராணிப்பேட்டை

அதிமுக கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் குறை சொல்வது தான் திமுகவினரின் வாடிக்கை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கி யுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 698 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 339 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. வேலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று, பொங் கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘பாதிக்கப்பட்ட மக்களின் ஏக்கத் தைப் போக்கும் வகையில் ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அறி வித்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எல்லோரும் கொண்டாடும் வகையில் சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் ரூ.2,500 மற்றும் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர தமிழக முதலமைச்சருக்கு அனை வரும் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் குற்றம் குறை சொல்வது தான் திமுகவினரின் வாடிக்கை. கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்த போதும் நீதி மன்றம் சென்று தடை பெற முயன்றனர். தற்போது, ரூ.2,500 வழங்கும்போதும் தடை பெற முயல்கிறார்கள்’’ என்றார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.26 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்தார்.

சோளிங்கரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரால் கடந்த 1983-ம் ஆண்டு பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பொங்கலுக்கு ரூ.100 ரொக்கமாக வழங்கப்பட்டது. தற்போது, முதலமைச்சர் பழனிசாமியால் பொங்கலுக்கு ரொக்கமாக ரூ.2,500 வழங்கப்படுகிறது’’ என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநிலங் களவை உறுப்பினர் முகமது ஜான், எம்எல்ஏக்கள் சு.ரவி (அரக் கோணம்), சம்பத் (சோளிங்கர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x