Published : 04 Jan 2021 03:19 AM
Last Updated : 04 Jan 2021 03:19 AM

சென்னை - ஈரோடு உட்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை

சென்னை சென்ட்ரல் - ஈரோடு, விழுப்புரம் - திருப்பதி உள்ளிட்ட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எர்ணாகுளத்தில் இருந்து வரும் 8-ம் தேதி முதல் தினமும் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02678) இரவு 7.50 மணிக்கு பெங்களூரு செல்லும். மறுமார்க்கமாக (02677) பெங்களூருவில் இருந்து வரும் 9-ம் தேதி முதல் தினமும் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

திருச்சியில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06843) இரவு 8.35 மணிக்கு பாலக்காடு செல்லும். மறுமார்க்கமாக (06844) பாலக்காட்டில் இருந்து வரும் 7-ம் தேதி முதல் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு திருச்சி செல்லும்.

ஈரோட்டில் இருந்து வரும் 10-ம் தேதி முதல் தினமும் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02650) அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். மறுமார்க்கமாக (02649) சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் தினமும் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு ஈரோடு செல்லும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் தினமும் காலை 5.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06854) மதியம் 12.20 மணிக்கு திருப்பதி செல்லும். மறுமார்க்கமாக (06853) திருப்பதியில் இருந்து தினமும் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு விழுப்புரம் செல்லும்.

ஆலப்புழா - கன்னூர் இடையே வரும் 10-ம் தேதிமுதல் தினசரி சிறப்பு ரயில்களும் (06307/06308), திருவனந்தபுரம் - நிஜாமுதீன் இடையே வரும் 9-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில்களும் (06083/06084) இயக்கப்பட உள்ளன.மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x