Published : 29 Dec 2020 03:16 AM
Last Updated : 29 Dec 2020 03:16 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள அதிமுக அரசின் ஊழல் பட்டியல் மீது தமிழக ஆளுநர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வேலூரில் காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழா, ஏர் கலப்பை விவசாயிகள் சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங் கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டு கள் தமிழகத்தின் தலைவிதியை மாற்ற நம்மால் ஆனதை செய்ய வேண்டும்.
கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஏறக்குறைய அனைத்து தொகுதி களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். அதை சாதாரண வெற்றியாக கருத வேண்டாம்.
இந்தியாவின் விவசாயத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களி டம் மோடி அரசு ஒப்படைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பொதுத் துறை, தனியார் துறையை அனும தித்தது. இதற்கு, பெயர் கலப்புப் பொருளாதாரம். ஆனால், இன்று அதை அவர்கள் மாற்றி விட்டு தனியார் துறையை மட்டுமே கொண்டு வருகிறார்கள். அனைத்து பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்க முயல்கிறார்கள். இதனால்தான் மோடியை எதிர்க் கிறோம். மோடி அரசாங்கம் பொரு ளாதாரத்தில் கூட மக்களை வீழ்த்த நினைக்கிறார்கள். இதற்காகத்தான் மோடி அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து அதிமுகவுக்கு எதிராக ஊழல் பட்டியலை கொடுத் திருக்கிறார். அந்த ஊழல் பட்டியல் மீது ஆளுநர் விசாரணையை அறிவிக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த வர்களை அடையாளம் காட்ட வேண்டும்’’ என்றார்.
பின்னர், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசும்போது, ‘‘மத்திய அரசு விவசாயிகளை நடத்தும் விதம் அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக கடுங்குளிரில் போராடி வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்துவேன் என்று கூறியவர் இன்று அதைப்பற்றி பேச மறுக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்க முடியவில்லை. கேள்வி எழுப்பினால் தாக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து பேச மறுக்கிறார்கள். விரைவில் காங்கிரஸ் தலைமைக்கு ராகுல் காந்தி வருவார். இந்த அரசுக்கு எதிராக போராடுவார்’’ என்றார்.
இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வாலாஜா ஜெ.அசேன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம், பாலூர் சம்பத், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சி.கே.தேவேந்திரன், எல்.எம்.கோட்டீஸ்வரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT