Last Updated : 27 Dec, 2020 11:03 AM

 

Published : 27 Dec 2020 11:03 AM
Last Updated : 27 Dec 2020 11:03 AM

அந்த கால நாணயங்களை சேர்ப்பதில் அலாதி பிரியம்

கடலூர்

அரிய அந்த கால நாணயங்கள், தபால் தலைகளை சேர்த்து வைப்பதில் சிலருக்கு அலாதி பிரியம். அப்படியான ஒருவர் தான் விருத்தாசலம் பெரியார் நகரில் வசிக்கும் மாரியம்மாள்.
இவர், சிறு வயது முதலே பழங்கால நாணயங்களை சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டு வந்துள்ளார்.

1857 ஆண்டு வெளியான ஆங்கிலேயர் காலத்து நாணயம் முதல் அண்மையில் வெளியாகி, மக்கள் செல்லுமா செல்லாதா என குழப்பத்தில் இருக்கும் 10 ரூபாய் நாணயம் வரை 400 வகையான நாணயங்களை இவர் சேர்த்து வைத்திருக்கிறார்.

எதனால் இந்தப் பழக்கம் மாரியம்மாளிடம் கேட்டோம்… “எல்லாருக்கும் ஏதாச்சும் பிடிக்கும். எனக்கு இது பிடிச்சிருக்கு” என்கிறார்.

இதே போல் உங்களில பலர் பழங்கால நாணயங்களை சேகரித்து கொண்டிருக்கலாம். உங்களுக்கான நாணயம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இதோ…

மெட்ராஸ் காயின் சொஸைட்டி எனும் அமைப்பு கடந்த 1991 முதல் நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக சில வழிகாட்டுதல்களை தந்துக் கொண்டிருக்கிறது. நாணய ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்களை இந்த அமைப்பு நிவர்த்தி செய்கிறது.

நாணயங்களை பாதுகாப்பாக வைத்திருக்க பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். ஆல்பத்தில் நாணயங்களைப் போடும் முன், வெதுவெதுப்பான நீரில் நாணயங்களைக் கழுவி எடுத்து, பருத்தி துணியால் துடைத்து வெயிலில் சிறிது நேரம் காய வைத்து அதன்பிறகே ஆல்பத்தில் போட வேண்டும் என்ற ஆலோசனையை வழங்குகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா கேலரியில் நாணயம் சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் கூடி, தங்களுக்குள் நிலவும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். வியாபாரிகளுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் இடையில் இருக்கும் பழங்கால நாணயங்கள் வாங்குவது, விற்பது போன்ற பரிவர்த்தனைகள் இங்கு நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x