Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

சென்னை, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் திமுக மகளிரணியினர் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே திமுகவின் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.

சென்னை/செங்கை/திருவள்ளூர்

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

15 நாட்கள் இடைவெளியில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.100 உயர்த்தப்பட்டதைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனஅக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி கலந்து கொண்டார்.

சென்னை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, திமுக மாவட்டச் செயலர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் தா.இளைய அருணா, நே.சிற்றரசு, விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கை மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகத்தில் நடந்த திமுக மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் செங்கை எம்.எல்.ஏ., வரலட்சுமி, பிரசாரக் குழு செயலர் சேலம் சுஜாதா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி, திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் பங்கேற்று, காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் ஆவடி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன்நகர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகமகளிரணி மாவட்ட அமைப்பாளர்கள் சங்கீதா, கோமளவள்ளி, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் மத்திய, மேற்கு, கிழக்குமாவட்டங்கள் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளர்களான சா.மு.நாசர், பூபதி, டி.ஜெ.கோவிந்தராஜ், எஸ்.சுதர்சனம் (மாதவரம் எம்.எல்.ஏ.), பூந்தமல்லி, திருவள்ளூர் எம்.எல்.ஏ.க்களான ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x