Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM

வேரழுகல் நோயால் சின்ன வெங்காயப் பயிர் பாதிப்பு; பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வேதனை: இழப்பீடு வழங்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் அண்மையில் பெய்த தொடர் மழையால் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட வெங்காயப் பயிர்களுடன் விவசாயிகள்.

பெரம்பலூர்/ திருச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக இம்மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயப் பயிர்கள் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டு, சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்திலேயே மிக அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்யும் பெரம்ப லூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பாடாலூர், இரூர், கூத்தனூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், டி.களத்தூர், நக்கசேலம், எசனை, செஞ்சேரி, வேலூர் உள்ளிட்ட கிராமங்களில் நிகழாண்டு ஐப்பசி பட்டத்தில் சின்ன வெங்காயப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை ஆகிய கார ணங்களால், பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயப் பயிர்கள் அனைத்தும் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள் ளன. இதனால், இப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நாட்டார்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தெரிவித்தது:

ஐப்பசி பட்டத்தில் விதைத்த வெங்காயம் நல்ல மகசூல் தரும். தரமாகவும் இருக்கும். இதனால் ஐப்பசி பட்டத்தில் அதிக எண்ணிக்கையில் இப்பகுதி விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை மற்றும் தொடர்ச்சியாக நிலவும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பயிரி டப்பட்டிருந்த சின்ன வெங்காய பயிர்களில் வேரழுகல் நோய் ஏற்பட்டு, அவை முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால், நிகழாண்டில் வெங்காயம் மகசூல் இருக்காது. இதற்கு முன் இப்படி பெருமளவு பாதிப்பு ஏற் பட்டதில்லை. நோய் தாக்குதலை எதிர்கொண்டு வளரும் வகையில் தரம் மேம்படுத்தப்பட்ட சின்ன வெங்காய விதைகளை தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர் கள் குறித்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீட்டை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் தற்போது பெய்த தொடர் மழையால், வயலில் மழைநீர் தேங்கி விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வெங்காயப் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன. எனவே, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும்.

வெங்காயப் பயிரைத் தாக்கும் திருகல் நோயிலிருந்து பயிரை பாதுகாக்க பூஞ்சானக் கொல்லி மருந்தை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கண்டறிந்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 20 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருக்கும் விதை ரகத்தை மேம்படுத்த வேண்டும்.

திருகல் நோய்க்கு எதிராக வீரிய விதையை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூரை அடுத்த செல்லிப் பாளையத்தில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி மனோகரன் தலைமை வகித் தார். ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சீனிவாசன், விவசாய சங்க பிரதிநிதிகள் மருவத்தூர் பாலகுரு, சின்னசாமி, ரெங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x