Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM

ஊதியம் வழங்கக்கோரி தற்காலிக பணியாளர்கள் மதுரை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மதுரை

மதுரையில் கரோனா பரவல் தடுக்கும் நடவடிக்கையில் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்த இளைஞர்கள், தங்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர்.

கரோனா தொற்று வேகமாக பரவிய காலத்தில் மதுரை மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் நோயாளிகளைக் கண்ட றியவும், அவர்களை அரசு மருத்து வமனைக்குப் பரிசோதனை செய்ய அழைத்து வரவும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 1,450 இளைஞர்களை சுகாதாரத் துறையினர் நியமித்தனர். இவர் களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் மாதம் ரூ.7,250 ஊதியம் வழங்கினர். முதல் இரண்டு மாதம் முறையாக ஒப்பந்ததாரர் ஊதியம் வழங்கியுள்ளார்.

மூன்றாவது மாதம் 23 நாள் பணிபுரிந்த நிலையில், கரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் இவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், அந்த 23 நாட்கள் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை ஒப்பந்ததாரர் வழங்க வில்லை. இந்நிலையில், பாக்கி சம்பளத் தொகையை பெற்றுத் தர வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை நூற்றுக்கணக் கான இளைஞர்கள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் சுகாதாரத் துறை அதிகாரி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இளைஞர்களிடமும், ஒப்பந்ததாரரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இன் னும் 3 நாட்களுக்குள் ஊதியத்தை தந்துவிடுவதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தார். இதுபோன்று பல முறை வாக்குறுதி அளித்த பின்பும் ஊதியத்தைத் தரவில்லை எனக் கூறிய இளைஞர்கள், ஊதியத்தைப் பெறாமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றனர்.

இது தொடர்பாக தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்த சத்யா கூறியதாவது:

கரோனா ஊரடங்கு காலத்தில் எங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்தோம். மாநகராட்சி சுகாதாரத் துறை கூறியபடி நாங்கள் தொற்று நோய்க்கான அறிகுறி உள்ளோரைக் கண்டறிய வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தோம். இதன் காரணமாக மதுரையில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் கடைசி மாத ஊதியத்தைத் தர மறுக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், எங்களுக்குரிய ஊதி யத்தை ஒப்பந்ததாரரிடம் தந்து விட்டதாகவும், அவரிடம் பெற்றுக் கொள்ளுமாறும் கூறுகின்றனர். ஒப்பந்ததாரர் ஊதியம் தர மறுக் கிறார். இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x