Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
மதுரை மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட விரிவாக்கப் பகுதியில் உள்ள 28 வார்டுகளும் ‘டி’ பிரிவில் மாற்றப்பட்டு அதற்கேற்ப சொத்து வரியை குறைத்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் உள்ள வார்டுகள் வசதி மற்றும் வணிகம் அடிப்படையில் ஏ, பி, சி, டி என 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவுக்கு சொத்து வரியாக சதுர அடிக்கு ரூ.3, ‘பி’-க்கு ரூ.2, ‘சி’-க்கு ரூ.1, ‘டி’க்கு 0.70 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதியைச் சேர்ந்த 28 வார்டுகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்த வார்டு கள் ‘ஏ, பி, சி, டி’ என வகைப் படுத்தப்பட்டன. இதையடுத்து இங்குள்ள வீடுகளுக்குச் சொத்து வரி பல மடங்கு உயர்ந்தது. அடிப்படை வசதி செய்து தராமல் சொத்து வரியை உயர்த்தியதால் அதிருப்தி எழுந்தது. இந் நிலையில், சொத்து வரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.
இடைப்பட்ட காலத்தில் 28 வார்டுகளிலும் சொத்து வரி வசூல் நடக்கவில்லை. இந்நிலையில் மாநகராட்சியில் இணைந்த 28 வார்டுகளும் ‘டி’ பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே ‘ஏ,பி,சி’ பிரிவில் இருந்த வார்டுகள் அனைத்தும் ‘டி’ பிரிவுக்கு மாற்றப்பட்டு புதிய வரி வசூலிக்கும் பணி நடக்கிறது.
இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
28 வார்டுகளும் ‘‘டி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் சொத்து வரி கணிசமாகக் குறைந்துள்ளது. சில ஆண்டுகளாகக் கூடுதலாக சொத்து வரி வசூலிக்கப்பட்ட வீடுகளுக்கு வரி குறைந்துள்ளது. இந்த வீடுகளில் பெரும்பாலும் ஓராண்டாக சொத்து வரி வசூலிக்கப்படவில்லை. ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கூடுதல் வரி சரி செய்யப்பட்டு வருகிறது. சரி செய்யப்பட்டதுபோக பாக்கி வரி வசூலிக்கும் பணி தற்போது நடக்கிறது.
1000 சதுர அடி அளவுள்ள ஒரு வீட்டுக்கு சொத்து வரி ரூ.3 ஆயிரம் ஏற்கெனவே வசூலிக்கப்பட்டது. இதே வீட்டுக்கு தற்போது புதிய வரி ரூ.700 மட்டுமே. இத்துடன் நூலகம், கல்வி வரி என அனைத்தும் சேர்த்தால் ரூ.900 வரை வரும். புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு நேரடியாகவே ‘டி’ பிரிவில் வரி வசூலிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளாக வசூலிக் கப்பட்ட கூடுதல் வரியை கணினியில் சரிக்கட்டும் பணி சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பட்டியல் கிடைத்ததும் ஒவ் வொரு வீட்டுக்கும் பாக்கியுள்ள வரி வசூலிக்கப்படும். பின்னர் அரையாண்டுக்கு ஒருமுறை குறைக்கப்பட்ட வரி வசூலிக் கப்படும். குறைக்கப்பட்ட வரி விகிதம் அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் ஆர்வத்துடன் வரி செலுத்துகின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT