Published : 14 Dec 2020 03:16 AM
Last Updated : 14 Dec 2020 03:16 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
கே.வி.குப்பம் அடுத்த ராஜாதோப்பு அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முழு கொள்ளளவை எட்டியது. அதேபோல, காட்பாடி அடுத்த செம்பராயநல்லூர் ஏரியும் நேற்று நிரம்பியது. மழைப்பொழிவு நின்ற போதிலும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள் ளனர்.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக ஒருங் கிணைந்த வேலூர் மாவட் டத்தில் கடந்த சில நாட் களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப் பத்தூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழைப்பொழிவு இல்லாவிட்டாலும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களும் ஏரிகளும் தற் போது வேகமாக நிரம்பி வரு கின்றன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணையும் ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கே.வி.குப்பம் அடுத்த ராஜா தோப்பு அணை நேற்று காலை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் நீர்மட்டம் 20.52 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதன் மூலம் காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காட்பாடி அடுத்த செம்பராயநல்லூர் ஏரி நேற்று நிரம்பி கோடிபோனது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழைப் பொழிவு இல்லாவிட்டாலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் வேலூர் மாவட்டத்தில் 35 ஏரிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 ஏரிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 129 ஏரிகள் என மொத்தமாக 171 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 7 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய ஏரிகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT