Published : 13 Dec 2020 12:44 PM
Last Updated : 13 Dec 2020 12:44 PM

திருக்கோஷ்டியூர் அருகே 40 ஆண்டுகளாக தரிசாக கிடந்த நிலம்: பசுஞ்சோலையாக மாற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே 40 ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த நிலத்தை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பள்ளி மாணவர்கள் பசுஞ் சோலையாக மாற்றி சாதனை படைத் துள்ளனர். திருக்கோஷ்டியூர் அருகே குண் டேந்தல்பட்டியைச் சேர்ந்தவர் சேவுகப் பெருமாள். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 5 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய ஆளின்றி 40 ஆண்டுகளாகத் தரிசாக விடப்பட்டது. இதனால் நிலம் முழுவதும் சீமைக் கரு வேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து சேவுகப்பெருமாள் வெளியூர்களில் வசித் துவந்த தனது பேரக் குழந்தைகள் அதிதியா, அவந்தியன், வைனேஸ், தஷ்வந்த், தியா ஆகியோரிடம் விடு முறைக் காலத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் தனது தரிசு நிலத்தில் விவசாயம் செய்யுமாறு தெரிவித்தார்.

தரிசாகக் கிடந்த நிலத்தை சோலையாக மாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கிய தனியார் அமைப்பினர்.

அவர்கள் தாத்தாவின் வேண்டு கோளை ஏற்று 6 மாதங்களுக்கு முன்பு குண்டேந் தல்பட்டியில் தங்களது பெற்றோருடன் குடியேறினர். அவர்கள் நிலத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றினர். தொடர்ந்து அந்த நிலத்தில் நெல், பயறு வகைகளைப் பயிரிட்டனர். அதில் ஊடுபயிராக காய்கறிகளை விவசாயம் செய்துள்ளனர். மேலும் ஒரு பண்ணைக் குட்டையையும் ஏற்ப டுத்தி மீன் குஞ்சுகளை வளர்த்து வரு கின்றனர்.

திருகோஷ்டியூர் தரிசு நிலத்தில் மாணவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டை.

இயற்கை விவசாய விஞ்ஞானியான நம்மாழ்வாரின் காணொலிக் காட்சிகளை பார்த்து இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர். செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை. தற்போது அதிதியா பிளஸ் 2-வும், அவந்தியன், வைனேஸ் 10-ம் வகுப்பும், தஷ்வந்த் 5-ம் வகுப்பும், தியா 7-ம் வகுப்பும் படிக் கின்றனர். பலரும் விவசாயத்தைக் கைவிட்டு வரும் இச்சூழலில் இயற்கை விவசா யம் மூலம் சாதனை படைத்து வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், அவர்களுக்கு சோழன் இளம் விவசாயப் புரட்சியாளர் விருது வழங்கி கவுரவி த்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: கரோனா காலம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பகலில் விவசாயம், இரவில் படிப்பு என இருந்து வருகிறோம். ஆன்லைன் வகுப்பு களையும் அவ்வப்போது கவனிக்கிறோம். விவசாயத்தில் ஒவ் வொருவரும் வெவ் வேறு பணிக ளைத் தேர்வு செய்து செய்கிறோம். எங்களுக்கு பெற்றோர் உதவியாக உள்ளனர். இந்த விடுமுறையில் விவசாயம் செய்வது, மீன் வளர்ப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொண்டோம். இளைஞர்கள், மாணவர்கள் விவசா யத்தில் ஈடுபட்டால் விவசாயம் அழியாது. பள்ளி திறந்தாலும் ஓய்வு நேரங்களில் விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளோம் என அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x