Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM
ஆந்திர மாநிலத்தில் கனமழை எச்சரிக்கையால் பொன்னை, பாலாற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ள 96 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டியுள்ளன.
தமிழகத்தின் வட மாவட் டங்களில் ‘நிவர்’ புயல் தாக்கத் தால் பரவலான கனமழை பெய்தது. குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பொன்னை, கவுன்டன்யா, பாலாற்றில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திடீர் மழை
இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலின் தாக்கம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 10.6 மி.மீ., காட் பாடியில் 18, மேல் ஆலத்தூரில் 8.8, பொன்னையில் 28, வேலூரில் 17.4, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 18.2, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 37.2, ஆற்காட்டில் 19, காவேரிப்பாக்கத் தில் 22, சோளிங்கரில் 13, வாலாஜா வில் 17, அம்மூரில் 16, கலவையில் 32.4 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
ஏரிகள் நிலவரம்
வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 22 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 3 ஏரிகளில் 80 முதல் 90 சதவீதமும், 2 ஏரிகளில் 70 முதல் 80 சதவீதமும், 10 ஏரிகளில் 50 முதல் 70 சதவீதமும், 15 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதமும், 41 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும், 8 ஏரிகளில் நீர்வரத்து இல்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 71 ஏரிகள் முழுமை யாக நிரம்பியுள்ளன. 7 ஏரிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும், 36 ஏரிகளில் 70 முதல் 80 சதவீதமும், 70 ஏரிகளில் 50 முதல் 70 சதவீதமும், 13 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதமும், 160 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் 12 ஏரிகளில் நீர்வரத்து இல்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள் ளன. ஒரு ஏரியில் 80 சதவீதமும், 3 ஏரிகளில் 50 முதல் 70 சதவீதமும், 8 ஏரிகளில் 25 முதல் 50 சதவீதமும், 9 ஏரிகளில் 25 சதவீத்துக்கு குறைவாகவும், 25 ஏரிகளில் நீர்வரத்து இல்லை.
வெள்ள அபாய எச்சரிக்கை
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தையொட்டியுள்ள ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக, பொன்னையாற்றில் எந்த நேரத்திலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப் படுகிறது. எனவே, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பொன்னை மற்றும் பாலாற்றங்கரையில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வரு வாய்த்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் மழை யால் பொன்னை ஆற்றில் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். கலவகுண்டா ஏரியில் இருந்து எந்த நேரமும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கன அடிக்கு தண்ணீரை திறந்துவிட வாய்ப்புள்ளது.
எனவே, பொன்னை அணைக் கட்டு பகுதியில் வெள்ள நீரின் அளவை கண்காணிக்க தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொன்னையாற்றில் நீர்வரத்து அதிகரித் தால் பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள தால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். காவேரிப்பாக்கம் ஏரி சுமார் 60 சதவீதம் நிரம்பியுள்ளது. 0.9 டிஎம்சி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது’’ என தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT