Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் டிசம்பருக்குள் விபத்துகளின் எண்ணிக்கை 20% குறைக்க திட்டம்: காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களை குறிக்கும் கூகுள் வரைபடம்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் விபத்துகளின் எண்ணிக்கை 20% குறைக்கவும் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 15 இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் விஜய குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 36-வது புதிய மாவட்டமாக திருப்பத்தூர் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விஜயகுமார், மாவட்ட காவல் துறைக்கான கட்ட மைப்பை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதி யாக, திருப்பத்தூர் மாவட் டத்தில் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் திருட்டு சம்பவங்களின் எண்ணிக் கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளையும், திருட்டு குற்றங்கள் நடைபெற்ற இடங்கள் குறித்த கூகுள் வரைபடங்களை வெளியிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் தகுந்த ஆலோ சனைகளை காவல் துறைக்கு தெரிவிக்கவும் வழிவகை செய்துள்ளார். இந்த புதிய முயற்சி பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

கூகுள் வரைபடம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற்ற சாதாரண விபத்துகள், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்ட இடங் களை சுட்டிக்காட்டும் கூகுள் வரைபடமும் வெளியிடப் பட்டுள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை மாவட்டத்தில் நடை பெற் றுள்ள திருட்டு, இரவு நேர திருட்டு, வழிப்பறி, பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடங் களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

450 கேமராக்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தை முழுமையாக கண்காணிக்கும் ‘இ-சர்விலன்ஸ்’ திட்டமும் செயல்படுத்தி வருகின்றனர். இதன் முதற் கட்டமாக மாவட்டஎல்லை மற்றும் நகர்புற பகுதி களில் சுமார் 450 கண்காணிப்பு கேமராக்களை பொருத் தும் திட்டத்தை முன்னெடுத் துள்ளனர். தொடர்ந்து, பிற பகுதிகளையும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டுவர உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை சுமார் 550 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் குறித்து காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கூறும் போது, ‘‘மாவட்டத்தில் விபத்து ஏற்பட்ட பகுதிகளை ஜிபிஎஸ் உதவியுடன் கூகுள் வரைபடத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 15 இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தெரியவந்தது. அந்த இடங் களை தேசிய நெடுஞ்சாலை துறையின் வல்லுநர் குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

அந்த 15 இடங்களில் இரவில் ஒளிரும் பிரதிபலிப் பான்கள் பொருத்துவது, இரும்பு தடுப்புகள் வைப்பது, சாலை நடுவில் உள்ள தடுப்பு களை பொதுமக்கள் கடப்பதை தடுப்பது, எச்சரிக்கை பதாகை கள் வைப்பதோடு, காவலர் கள் பாதுகாப்புப் பணியும் அதிகரிக்கப்படும்.

இந்தாண்டு டிசம்பர் 30-ம் தேதிக்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 20 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே, உட்கோட்ட அள வில் விபத்துகளின் எண்ணிக் கையை குறைக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் களுக்கு ரூ.5 ஆயிரம் வெகு மதி வழங்கப்பட்டு வருகிறது. திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்ற இடங்களில் பொது மக்கள் கவனமாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், வியாபாரிகள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளோம். காவலர்களின் ரோந்து எண்ணிக் கையும் அதிகரித்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x