Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

தேர்தலுக்காக பாஜக வேல் யாத்திரை நடத்துகிறது: முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசினார்.

கடலூர்

புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தின் அவலநிலை மற்றும் அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புவனகிரி திமுக எம்எல்ஏசரவணன் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சரும், கட லூர் கிழக்கு மாவட்டதிமுக செயலாளருமான எம்ஆர் கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கண்டனஉரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுகவில் "எல்லோரும் நம் முடன்" மூலம் 19 லட்சத்திற்கும் மேல் புதிய உறுப்பினர்கள் குறு கிய காலத்தில் சேர்ந்துள்ளனர். இது திமுக தலைவர் ஸ்டாலின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2021-ல் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் இது காட்டுகிறது.

ஊராட்சியில் அடிப்படை வசதிகளும் ஆளும் கட்சி சார்ந்த ஊராட்சிகளுக்கு மட்டுமே வழங்கப்படு கிறது. ஊரடங்கு காலத்தில் ஊராட்சிஒன்றியங்களில் பல்வேறு பணிக ளுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் கமிஷன் வாங்குவதற்கே தவிர வேறொன்றுமில்லை.

பாஜகவின் வேல் யாத்திரையை போல் வேறு யாரேனும் செய்தால் இது போல் விட்டு வைப்பார்களா? நாடகம் போல் நடத்துகின்றனர். தேர்தலுக்காக மட்டுமே வேல் யாத்திரை நடத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x