Published : 09 Nov 2020 03:13 AM
Last Updated : 09 Nov 2020 03:13 AM
பாஜகவின் ‘வேல் யாத்திரை’ மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, மாவட்ட எல்லையில் ஏஎஸ்பி தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக சார்பில் நவம் பர் 6-ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் இருந்து ‘வேல் யாத்திரை’ புறப்பட்டு டிசம்பர் 6-ம் தேதி திருச் செந்தூரில் முடிவுறும் என அக்கட்சி சார்பில் அறிவிக் கப்பட்டது. இதற்கு, தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்தது.
இதைத்தொடர்ந்து, நவம்பர் 6-ம் தேதி திட்டமிட்டப்படி திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கோயிலுக்குள் சென்று முருகப்பெருமானை வழிபட்டார்.
பிறகு அங்கிருந்து ‘வேல் யாத் திரை’ புறப்பட தயாரானபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை எனக்கூறினர். இருப்பினும், தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்குவோம் எனக்கூறி வேல் யாத்திரை புறப்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங் களில் பாஜகவினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு அன்றிரவு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை திரு வொற்றியூர் வடிவுமையம்மாள் கோயிலில் இருந்து ‘வேல் யாத்திரையை’ பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று காலை தொடங்கினார். இந்த யாத்தி ரையில் ஏராளமான பாஜக நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த யாத்திரை திருவொற்றி யூரில் தொடங்கி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வழி யாக இன்று பிற்பகல் (நவ.9-ம் தேதி) வேலூர் வந்தடைய உள் ளது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை வேலூர் மண்டி தெருவில் பாஜக சார்பில் விளக்கக்கூட்டமும் நடைபெற உள்ளது பின்னர், நாளை 10-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வழியாக வேல் யாத்திரை கிருஷ்ணகிரி மாவட்டம் செல்கிறது.
தற்போது, கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பாஜகவின்வேல் யாத்திரையில் ஆயிரக்கணக் கானோர் ஒன்றாக கலந்து கொள் ளக்கூடும் என்பதால் காவல் துறை யினர் யாத்திரைக்கு அனுமதி மறுத் துள்ளனர். இருப்பினும், தடையை மீறி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை தொடங்கியுள்ளதால் அதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்களா? என்பதை கண்டறிய மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பம் பகுதியில் ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடாக இரும்புதடுப்புகள் தேசிய நெடுஞ்சாலை யில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தடையை மீறி வேல் யாத்திரையில் கலந்து கொள்ள வேலூரில் இருந்து செல்பவர்களை கண்டறிந்து அவர் களை கைது செய்யவும் காவல் துறையினர் திட்டமிட்டு அவ் வழி யாக செல்லும் வாகனங்களை தீவிர மாக கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT