Published : 08 Nov 2020 03:13 AM
Last Updated : 08 Nov 2020 03:13 AM
நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தனது அரசியல் வருகை குறித்து முற்றுப்புள்ளி வைக்கவில்லை என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.
வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘உள்ளாட்சி பதவிக்கான பாதி தேர்தலை நடத்திவிட்டு மீதி தேர்தலை நடத்தாமல் இருப்பது மிகப் பெரிய ஜனநாயக சிதைவு. மீதமுள்ள உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வேண் டும். ஒரு வேளை தேர்தல் நடத்தினால் அதில் தேர்வு செய்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்.
எனது நண்பரான ரஜினிக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரது உடல் நிலை குறித்து அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது உடல் நலன் முக்கியம். ஆனாலும், அவர் அரசியலுக்கு வந்து களம் காண ஜனவரி, பிப்ர வரியில் கூட வாய்ப்பு இருக்கிறது.
கட்சி தொடங்கி விரைவில் ஆட்சி அமைத்த சம்பவங்கள் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஆந்திராவில் என்.டி.ஆர்-க்கும்நடந்துள்ளது. அரசியல் வருகைகுறித்து ரஜினி தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்க வில்லை. கமா (தொடரும்) என்று தான் போட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப் படையில் விடுதலை செய்ய வேண்டும். 7 பேர் விடுதலையில் தி.மு.க கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை. பா.ஜ.கவுக்கும் தெளிவான கருத்து இல்லை. 7 பேர் விடுலையில் முடிவெடுப்பவர்கள் மத்திய அரசு தான். இனியும் அவர்களை சிறையில் வைத்திருப்பது சரியல்ல’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT