Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 5 மாதங்கள் உள்ள நிலையில் திண்டுக்கல்லில் பணிகளை தொடங்கிய கட்சிகள்

நத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் பெயருடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இன்னும் கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், தற் போதே தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என ஆயத்த பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில் அதிமு கவினர் கிராமம், கிராமமாகச் சென்று பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் முருகானந்தம் கடந்தவாரம் மாவட்ட நிர் வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து திண்டுக்கல்லில் ஆலோ சனை நடத்தினார்.

திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி தனது தொகுதிக்குட்பட்ட கிராமங் களுக்குச் சென்று திண்ணை பிரச்சாரம் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளன.

நாம் தமிழர் கட்சியினர் நத்தம் தொகுதியில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயருடன் தொகுதி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தேர்தல் பிரச்சாரத்தை முன்னதாகவே தொடங்கிவிட்டனர். இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் மீண்டும் போட்டியிடுகிறார்.

மற்ற கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற் கொண்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர் பெயருடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x