Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு

விவசாயிகளை பாதிக்கும் 3 சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதிக்கும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் வணிகச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைஒப்பந்த பாதுகாப்புச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு துணை போகும் தமிழக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு தலைமை அஞ்சல் நிலையம் அருகில் இந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், மதுராந்தகம் வட்டச் செயலர் ராஜா, பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதிச் செயலர் வேலன், திருக்கழுக்குன்றம் வட்டச் செயலர் குமார் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி கவுரி உள்ளிட்டோர் பேசினர்.

காஞ்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்டத் துணைத் தலைவர் சாரங்கன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலர் நேரு, நிர்வாகிகள் ஜீவா, லாரன்ஸ், லிங்கநாதன், தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் டில்லிபாய், சசிகலா, உஷாராணி மக்கள் ௮திகரம் நிர்வாகி திலகவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முா்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x