Published : 02 Nov 2020 05:51 PM
Last Updated : 02 Nov 2020 05:51 PM
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வரும் 4 மற்றும் 5 தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத் துறை இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
“இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை. தமிழகத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் நவம்பர் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும்”
Heavy Rainfall Warning as per IMD:
— TN SDMA (@tnsdma) November 2, 2020
Heavy rain is likely to occur at isolated places over Madurai, Virudhunagar, Sivagangai, Coimbatore and Nilgiris districts of Tamil Nadu on 04.11.2020 and 05.11.2020.
- TNSDMA
இவ்வாறு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வானிலை ஆய்வு மையம் பொதுவாக மழை குறித்து அறிவிக்கும். பேரிடர் மேலாண்மைத் துறை இயற்கைச் சீற்றம், மழை, வெள்ளம் போன்ற தருணங்களில் இயங்கும் துறை. அவர்கள் இவ்வாறு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT