Published : 04 Oct 2020 04:53 PM
Last Updated : 04 Oct 2020 04:53 PM
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் போது கரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் அவருடன் பயிற்சியில் இருந்த காவலர்கள் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
தமிழகத்தில் காவலர்கள் சமூக வலைதளங்களில் குரூப் ஆரம்பித்து காவலர்களின் குடும்பத்திற்கு கல்வி, மருத்துவம், திருமணம் போன்றவற்றுக்கு உதவி செய்து வருகின்றனர். தற்பொழுது கரோனா தொற்று காரணமாக பணியில் இருந்த காவலர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்திற்கு இந்த அமைப்பு மூலம் நிதி திரட்டி உதவி வருகின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ஜூலியன்குமார். இவர் கடந்த சில நாட்கள் முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது பற்றி அறிந்த அவருடன் 2003-ம் ஆண்டு காவலர் பயிற்சியில் இருந்த காவல் துறையினர் அனைவரும் 'உதவும் கரங்கள்' இணையதள அமைப்பு மூலம் ஒன்றிணைந்து ரூ. 25 லட்சத்து 14 ஆயிரம் நிதி திரட்டினர்.
அதனை இன்று (அக். 4) கடலூரில் உயிரிழந்த ஜூலியன்குமார் மனைவி மேரிமெல்பின்ராணியிடம் வழங்கினார்கள். இதில் தலைமை காவலர்கள் முரளி, ராஜேந்திரன், அந்தோணி, சங்குபாலன், குமரசேன், குணசேகர், ஜெயராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT