Published : 02 Oct 2020 10:38 AM
Last Updated : 02 Oct 2020 10:38 AM

குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்: 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

குறிஞ்சிப்பாடி அருகே ரெட்டிப்பாளையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

கடலூர்

குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள் ளன. இதனால் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

குறிஞ்சிப்பாடி வட்டம் வரதரா சன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையத்தில் அரசின் நேரடிநெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இப்பகுதி விவ சாயிகள் குறுவை பருவத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. வரு டாந்திர கணக்கை முடிப்பதற்காக கடந்த 28-ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மூடி விட்டனர்.

இந்த விவரம் தெரியாமல், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு ரெட்டிப்பாளையம், கல் குணம்,வரதராசன்பேட்டை, குருவப்பன் பேட்டை பூதம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை ரெட்டிப்பாளையத்திற்கு கொண்டு வந்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே சுமார் 10 ஆயி ரம் மூட்டைகளுக்கு மேல் அடுக்கி வைத்திருந்தனர்.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும்கன மழையால் இந்த நெல்மூட்டை கள் நனைந்து வீணாகின. இதனால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனேதிறந்து, அதன் வெளியே அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டை களை கொள்முதல் செய்ய மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

இது குறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் கூறுகையில், "சேத்தியாத்தோப்பு அருகே வளசக்காட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதன் அருகே விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் மழையில் நனைத்து வீணா கியுள்ளது" என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x