Published : 13 Sep 2020 12:57 PM
Last Updated : 13 Sep 2020 12:57 PM
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் அருகே உள்ள சம்படி பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி செங்கமலம் (47). இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். செங்கமலம் குழந்தைகளுடன் சம்படியில் உள்ள வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சம்படி அருகேயுள்ள காட்டுப்பகுதியில் செங்கமலம் முகம் சிதைக்கப்பட்டு, உடலில் ஆடையின்றி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஏரல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித் தனர். பாலியல் வன்கொடுமை செய்து செங்கமலம் கொலை செய்யப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஏரல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, எஸ்ஐ முருகப்பெருமாள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT