Published : 07 Sep 2020 10:08 AM
Last Updated : 07 Sep 2020 10:08 AM

விடுமுறையை கழிக்க இ-பாஸ் இல்லாமல் ஏற்காடு வந்த பயணிகள் ஏமாற்றம்

வெளி மாவட்டங்களில் இருந்து ஏற்காட்டுக்கு காரில் செல்பவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என்பது குறித்து சேலம் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் சரிபார்க்கும் போலீஸார்.

சேலம்

ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் வெளி மாவட்டங் களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று வெளி மாவட்டத்தில் இருந்து இ.பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந் தது. மருத்துவச் சிகிச்சை, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்ட சில முக்கிய காரணங்களுக்கு இ-பாஸ் பெற்று கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் இ-பாஸ் முறை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது. எனினும், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் வெளிமாவட்டத்தினர் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஏற்காட்டுக்கு வரும் வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் கட்டாயம் எனவும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யவும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் ஏற்காட்டுக்கு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் அதிகளவில் திரண்டு வந்திருந் தனர்.

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் இ-பாஸ் சோதனை நடத்தியபோது, பலர் இ-பாஸ் இல்லாமல் வந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக பலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அரசின் நடை முறையை கூறி இ-பாஸ் பெறாமல் வந்தவர்களை போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால், விடுமுறை நாளை ஏற்காட்டில் கழிக்க வந்த பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் இ-பாஸ் இருந்தால் மட்டுமே ஏற்காடு செல்ல போலீஸார் அனுமதித்தனர். இதனால், அப்பகுதியில் வாகன நெரிசலும், பரபரப்பும் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x