Last Updated : 06 Sep, 2020 11:56 AM

 

Published : 06 Sep 2020 11:56 AM
Last Updated : 06 Sep 2020 11:56 AM

சிறப்பான கட்டமைப்பு வசதி; சிறப்பான சிகிச்சை: தேசிய தரச்சான்று பெற்ற அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள தேசிய தர உறுதிச் சான்று.மத்திய அரசின் தேசிய தர உறுதிச் சான்று பெற்ற அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை.

விருதுநகர்

சிறப்பான கட்டமைப்பு வசதி, சிறப்பான சிகிச்சைக்காக விரு துநகர் மாவட்டம், அருப்புக் கோட் டை அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தர உறுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆண்டுதோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அப்போது, மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயா ளிகள் பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய்ப் பிரிவு, நெஞ்சக நோய்ப் பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சிசு பராமரிப்புப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவ அறுவைச் சிகிச்சை அரங்கம், கண் நோய்ப் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு துறையின் செயல் பாடுகளையும் மதிப்பிட்டு மதிப் பெண்கள் வழங்கப்படும். 70 மதிப்பெண்கள் பெற்றால் அந்த மருத்துவமனைக்கு தேசியத் தர உறுதிச் சான்று வழங்கப்படும்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சை, கட்டமைப்பு வசதிகளை பாராட்டி மத்திய மருத்துவக் குழு 92 மதிப்பெண்களை வழங்கியுள் ளது.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள தேசிய தர உறுதிச் சான்று.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தேசிய தர உறுதிச் சான்று இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை இருக்கை மருத்துவ அலுவலர் வடிவேல், மூத்த பல் மருத்துவர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 294 படுக்கை வசதிகள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த மருத்துவமனை ஏற்கெனவே காயகல்ப விருது பெற்றுள்ளது.இம்மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 2,374 பிரசவங்கள் நடந்துள்ளன. 2,308 பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 437 பேர் வெளி நோயா ளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

2019 ஜூலையில் இம்மருத்துவ மனையில் மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், பல்வேறு தரவுகளின் அடிப்படையில் 92 மதிப் பெண்கள் பெற்று மத்திய அரசின் தேசிய தர உறுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் ஒரு படுக்கைக்கு ஓராண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 294 படுக்கைகளுக்கு ரூ.29.40 லட்சம் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்தத் தொகை மருத்துவமனை மேம்பாட்டுக்குச் செலவிடப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x