Last Updated : 29 Aug, 2020 03:30 PM

 

Published : 29 Aug 2020 03:30 PM
Last Updated : 29 Aug 2020 03:30 PM

விருதுநகரில் 5.84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 36.61 லட்சம் முகக்கவசங்கள் விநியோகம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 5.84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 36.61 லட்சம் இலவச முகக் கவசங்கள் வழங்கும் பணியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கிவைத்தார்.

சிவகாசியில் ரேசன் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச விலையில்லா முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபா முன்னிலை வகித்தார்.

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக முதல்வரின் உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீட்டிலிருந்து வெளியில் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 5,84,301 குடும்ப அட்டைகள் உள்ளன.

இதன்மூலம் நகர் பகுதியில் 14,00,632 பயனாளிகளுக்கும், கிராமப்புறங்களில் 22,60,750 பயனாளிகளுக்கும் என மொத்தம் 18,30,891 பயனாளிகளுக்கு தலா இரு முகக்கவசங்கள் வீதம் 36,61,382 முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், கூட்டுறவுச்சங்க இணைப்பதிவாளர் திலீப்குமார், சார் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x