Last Updated : 24 Aug, 2020 11:42 AM

 

Published : 24 Aug 2020 11:42 AM
Last Updated : 24 Aug 2020 11:42 AM

கல்குவாரிக்கு தடை கோரி குடும்ப அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்

விருதுநகர்

கல்குவாரிக்கு தடை விதிக்கக் கோரி குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள்ஈடுபட்டதால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே எல்கை பட்டியல் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. குடியிருப்புகள் அருகில் இயங்கி வரும் இந்த கல் குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் சிதறி வீடுகளின் அருகில் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் இக் கல் குவாரிகள் தடை விதிக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த எல்கைபட்டி கிராம மக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அக் கிராம மக்கள் கூறுகையில், "குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சுமார் 300 மீட்டர் காலத்திற்குள் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி உள்ளது ஆனால் இந்த குவாரியிலிருந்து அருகில் உள்ள எல்லைப் பட்டி கிராம குடியிருப்புகள் சுமார் 150 மீட்டர் காலத்திற்குள்ளேயே உள்ளது.

அப்படியிருந்தும் விதிமுறை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக சக்தியுள்ள வெடிகளைக் குவாரியில் வெடிக்கும் போது இங்குள்ள வீடுகள் அதிர்வதும், விரிசல் விழுவது வாடிக்கையாகி உள்ளது.

அத்துடன் எல்லைப்பட்டியில் வசிக்கும் முதியோர், இருதய நோயாளிகள் இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிறிய குழந்தைகள் வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து எழுந்து அழுகின்றனர்.

மேலும் வெடிக்கும்போது பறக்கும் கற்கள் கிராமத்திற்குள் வந்து விழுந்து கிராம மக்களுக்கு அடிக்கடி காயங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான வெடி பொருட்களை பயன்படுத்துவதால் நிலத்தடி நீருடன் அமிலம் கலந்து விஷமாகி உள்ளது.

மேலும் இரவு முழுவதும் கிரஷர் இயங்குவதால் அதன் இரைச்சல் காரணமாக கிராம மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம்‌. தூசியின் காரணமாக சுவாகக் கோளாறுகளுக்கு ஆளாகியுள்ளோம். எனவே விக்கல் குவாரியை மூட அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x