Published : 31 Jul 2020 07:08 AM
Last Updated : 31 Jul 2020 07:08 AM
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தவர் கல்யாணராமன் (54). இவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார். எனினும், நேற்று காலை கல்யாணராமன்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன் பின்னர் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர் தவிர தூத்துக்குடி மாநகரில் மேலும் மூன்று பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT