Published : 24 Jul 2020 08:29 PM
Last Updated : 24 Jul 2020 08:29 PM
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்துக்கு, அவருடன் பணியில் சேர்ந்த 2100 சக காவலர்கள் இணைந்து ரூ.16 லட்சம் உதவித் தொகை வழங்கினர்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலைக் காவலர் புங்கலிங்கம் கடந்த 10.06.2020 கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய அவருடன் 2008-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டினர்.
தமிழகம் முழுவதும் அவருடன் ஒரே நேரத்தில் காவலர் பணிக்குச் சேர்ந்த 2100 காவலர்கள் இணைந்து ரூ.16,01,453 நிதி திரட்டினர். இந்த நிதியை மறைந்த காவலர் புங்கலிங்கம் குடும்பத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
இதில் புங்கலிங்கங்கத்தின் மகள்கள் பேபி (7) மற்றும் சிவகாமி (4) ஆகிய இருவரது பெயரிலும் தலா ரூ.6 .5 லடசம் வீதம் எஸ்.பி.ஐ இன்சூரன்ஸில் டெபாசிட் செய்தும், புங்கலிங்கலிங்கத்தின் மனைவி காசியம்மாள் பெயரில் ரூ.2,01,453/-ம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.1 லட்சம் புங்கலிங்கத்தின் தாயார் தெய்வானையிடம் காசோலையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மற்றும் இந்த நிதியை திரட்டிய 2008-ம் ஆண்டு காவலர்கள் குழுவைச் சேர்ந்த சந்தோஷ், பாலசுப்பிரமணியன் (கடலூர்), கணேஷ் (செங்கல்பட்டு), இளமாறன் (தஞ்சாவூர்), பால்பாண்டி (மதுரை), பாலசுப்பிரமணியன் (புதுக்கோட்டை), ஆனந்த் (திருச்சி), சின்னத்தம்பி (நெல்லை) மற்றும் தூத்துக்குடி காவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT