Published : 15 Jul 2020 07:28 AM
Last Updated : 15 Jul 2020 07:28 AM
கரோனா நிவாரணம் வழங்குவதாக இணையதளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சேலம் மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா நிவாரணம் வழங்குவதாக இணையதளம் வாயிலாக விளம்பரம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் அவசரப்பட்டு, கரோனா நிவாரணம் வழங்கும் மோசடி விளம்பரத்தை நம்பி அந்த இணையதளங்களுக்குள் செல்ல வேண்டாம்.
மேலும், பொதுமக்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய கடவுச் சொற்களை (ஓடிபி) யாருக்கும் அளிக்க வேண்டாம். அவ்வாறு வங்கிக் கணக்கு விவரங்களை அளித்தால், வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம் உள்ளது.
எனவே, மோசடி விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT