Published : 23 Jun 2020 12:29 PM
Last Updated : 23 Jun 2020 12:29 PM
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வங்கி கடன் குறித்து பேச தகுதியில்லை என்று பாஜக மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூன் 23) கடலூரில் கூறியதாவது:
"தமிழக பாஜக வங்கியில் தொழில் கடன் பெறுபவர்கள் உதவி பெறும் விதமாக வலைதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
கே.எஸ்.அழகிரிக்கு உதவி என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது. அவரது வாழ்க்கையில், சட்டரீதியான உதவிகளை கூட தன் ஊருக்கு தன் இயக்கத்திற்கு பொதுமக்களுக்கு செய்தது கிடையாது. அவர் பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு அவர் வாங்கிய கடன் மற்றும் அதனை செலுத்திய விவரங்களை வெளியிட்டால் அவரின் நேர்மையை மதிக்க தயாராக உள்ளோம்.
இதில் பாஜகவினர் இடைத்தரகராக செயல்படவில்லை. கடன் பெறுவோர் வங்கிக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க இலவசமாக தொழில் அறிக்கை தயாரிக்க உதவுகிறது. தகுதியான நபருக்கு வங்கி கடன் அளிக்க தவறும் பட்சத்தில் அதை நிதி அமைச்சரிடம் கவனத்திற்கு எடுத்துச்சொல்ல கட்சிக்கு உரிமை உள்ளது.
முன்னாள் இந்தியன் வங்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் ஏன் சிறை சென்றார் என்பது மக்களுக்கே தெரியும். கே.எஸ்.அழகிரி பாஜகவின் வங்கி கடன் வலைதளத்தை விமர்சிப்பது 'சாத்தான்கள் வேதம் ஓதுவது போல் உள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT