Last Updated : 17 Jun, 2020 07:10 PM

 

Published : 17 Jun 2020 07:10 PM
Last Updated : 17 Jun 2020 07:10 PM

கலைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான வீட்டுமனைகளை விற்றதில் பல கோடி ரூபாய் முறைகேடு: தூத்துக்குடி எம்எல்ஏ பரபரப்பு புகார் 

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கலைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு சொந்தமான வீட்டு மனைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்: தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 12 கூட்டுறவு வீட்டுவசதி கடன் சங்கங்கள் கலைக்கப்பட்டு, அதற்கான கலைத்தல் அலுவலர் /தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சங்கங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுமனைகள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த வீட்டுமனைகளை சந்தை மதிப்பை விட மிக குறைவான விலைக்கு தனி அலுவலர் முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது சங்கங்களின் உறுப்பினர் அல்லாதவர்களை போலியாக உறுப்பினர் என குறிப்பிட்டும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது போல போலியாக குறிப்பிட்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

எனவே, தனி அலுவலர் நியமனத்துக்கு பின்பாக, அவர் மூலம் மேற்கொள்ளப்பட்ட கிரையங்கள் அனைத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.

மேலும், தனி அலுவலரால் மேற்கொள்ளப்பட்ட கிரையப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையில் எங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

மேலும், முறைகேடான வழியில் கிரையம் பெற்ற இடத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x