Published : 14 Jun 2020 06:44 AM
Last Updated : 14 Jun 2020 06:44 AM
கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு கொடிகளை கடித்து நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை மருந்து தெளித்து அழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கத்தால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை, என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு உட்பட்ட வளப்பூர் நாடு இளமாத்திப்பட்டியில் உள்ள மிளகு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் குவிந்து அவற்றை நாசம் செய்து வருகிறது. மிளகு அறுவடை சீசனில் வெட்டுக்கிளிகள் மிளகு கொடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த வேளாண் துறையினர் மருந்து தெளித்து அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் இவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை எனவும் வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT