Published : 26 May 2020 06:59 AM
Last Updated : 26 May 2020 06:59 AM

சிறுமி கொலை; சிறுவனிடம் விசாரணை- பெற்றோர்களுக்கு டிஐஜி எச்சரிக்கை

திருச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 3-ம் வகுப்பு படித்துவந்த 9 வயதான சிறுமி நேற்று முன்தினம் மாலை ஒரு தோட்டத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயங்களுடன் இருந்த சிறுமியை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக் கறை படிந்த பேன்ட், சட்டை ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் விசாரித்தபோது, அந்த ஆடைகள் சிறுமியின் உறவுக் காரரின் 14 வயது மகனுடையது எனத் தெரியவந்தது. அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரித்த போலீஸார், அந்தச் சிறுவன் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றபோது, உடன்படாததால் பெற்றோரிடம் கூறிவிட்டால் பிரச்சினையாகிவிடும் என பயந்து தலையில் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டதாக தெரி வித்தனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் கூறியபோது, “குழந்தைகள் சமூக ஊடகங்கள், யூ டியூப் சேனல்களில் பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்ப்பதால்தான் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன. எனவே, குழந் தைகள் செல்போனைப் பயன் படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x