Last Updated : 12 May, 2020 03:07 PM

 

Published : 12 May 2020 03:07 PM
Last Updated : 12 May 2020 03:07 PM

கரோனா கால இரட்டிப்பு சம்பளம் கோரி தென்காசியில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி

கரோனா கால இரட்டிப்பு சம்பளம் கோரி தென்காசியில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள துப்புரவு வார்டு அலுவலகம் அருகில் தூய்மைப் பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, துப்புரவு சங்க தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவல் வேல்முருகன், தென்காசி வட்டாரச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கரோனா கால வேலைக்காக இரட்டிப்பு சம்பளம் வழங்குவதற்கான அரசாணை பிறப்பித்து, உடனடியாக இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.

அனைத்து தினக்கூலி, ஒப்பந்த, சுயஉதவிக் குழு தொழிலாளர்களுக்கும் தினசரி சம்பளம் ரூ.600 வழங்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணம் முழுவதையும் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக வழங்க வேண்டும்.

வார விடுமுறை சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தென்காசி தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x