Published : 17 Aug 2015 09:28 AM
Last Updated : 17 Aug 2015 09:28 AM

மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து செப். 2-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க முடிவு

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து செப்டம் பர் 2-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட 11 தொழிற்சங்கங்கள் முடிவு செய் துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் ஆம்னி பேருந்து, லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை ஓட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

சாலை விபத்துகளை குறைக் கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓட்டுநர்களின் தரத்தை உயர்த்துதல், விதிமுறை களை மீறிவோருக்கு அதிக அபரா தம், கடுமையான தண்டனை அளித் தல் உள்ளிட்ட முக்கிய அம்சங் களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தைக் கண்டித்து சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, மாநில அரசுகளின் பொது போக்கு வரத்து துறை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் செப்டம்பர் 2-ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 2 கோடி பேர் இதில் பங்கேற்பர். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்’’ என்றார்.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் கள் சம்மேளன (ஏஐடியுசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘புதிய சட்டத் திருத்தத்தின்படி வாகனப் பதிவு, சோதனை, தகுதிச் சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. எனவே, இந்த சட்ட மசோதாவை எதிர்க்கிறோம். வேலைநிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x