Published : 21 Aug 2015 09:29 AM
Last Updated : 21 Aug 2015 09:29 AM

செமி கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் ராக்கெட் ஏவும் முறை விரைவில் அறிமுகம்: ஐ.எஸ்.ஆர்.ஓ. மகேந்திரகிரி மைய இயக்குநர் தகவல்

`இந்தியாவில் ராக்கெட் ஏவுதலில் செமி கிரையோஜெனிக் தொழில் நுட்பம் விரைவில் அறிமுகம் செய் யப்படவுள்ளது’ என திருநெல் வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவ உந்து எரிபொருள் மைய இயக்குநர் எஸ்.ராக்கேஸ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட அறிவி யல் மையத்தில் நேற்று தொடங் கிய 3 நாள் அறிவியல் கண்காட் சியைத் திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: `ஐ.எஸ்.ஆர்.ஓ. பல்வேறு வகையான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்து வருகிறது. வரும் 27-ம் தேதியில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-6 ராக்கெட் ஏவும் பணி நடைபெறவுள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு துறைக்கான செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

புதிய தொழில்நுட்பம்

மகேந்திரகிரி திரவ உந்து எரி பொருள் மையத்தில் கிரையோ ஜெனிக் இன்ஜின் தொழில்நுட்ப ஆய்வுகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுவரை கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சி ஜன் ஆகிய எரிபொருட்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இதற் கான செலவு அதிகம். இச்செலவை பாதியாக குறைக்கும் வகையிலும் அதிக உந்துசக்தி கொண்டதாகவும் செமி கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.

மாற்று எரிபொருள்

இப்புதிய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இன்ஜின்களில் எரிபொருளாக மண்ணெண் ணெயும், திரவ ஆக்சிஜனும் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இத்தகைய தொழில் நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இந்த தொழில்நுட் பத்தை அறிமுகம் செய்யுமுன் ரஷ்யாவில் இது பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்’ என்றார் அவர்.

பின்னர் கண்காட்சி தொடக்க விழாவில் அவர் பேசும்போது, `பூமியில் மணல், இரும்புத் தாது போன்ற வளங்கள் குறைந்து வரு கின்றன. அதற்கு மாற்றாக புதிய வளங்களை கண்டு பிடிக்க வேண் டிய நிலை உருவாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு செயற்கை கோள்களை விண்ணில் ஏவியிருக் கிறது. இந்த செயற்கைக்கோள்கள் நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கும் பயன்தருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x