Published : 10 May 2020 07:05 AM
Last Updated : 10 May 2020 07:05 AM
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில்கட்டணத்தை அந்தந்த மாநிலங் கள் செலுத்தாவிட்டால் பேரிடர் நிதியில் இருந்து தமிழக அரசேசெலுத்தும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது தொழில்கள்முடங்கியுள்ளதால், பலர் தங்கள்சொந்த ஊர்களுக்கு செல்லவிருப்பம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இதற்கு அனுமதியளித்த நிலையில், தமிழக அரசின்சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய்த் துறை செயலர்அதுல்ய மிஸ்ரா மற்றும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வேலூர், கோவை உள்ளிட்டமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வரு கின்றனர்.
கூலி வேலைக்காக வந்து பலநாட்கள் வேலையின்றி தங்கியுள்ளதொழிலாளர்களிடம் ரயில் கட்டணத்துக்கான பணம் இல்லாத நிலையில், அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலஅரசே தொகையை செலுத்தலாம்என கூறப்பட்டது. ஆனால், பலமாநிலங்கள் தொகையை செலுத்தமுன்வரவில்லை. இதனால் அத்தொகையை தமிழக அரசே செலுத்த முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட அரசாணையில், ‘‘ஒரு புலம்பெயர் தொழிலாளியோ, அல்லது அவர் சார்ந்த மாநிலமோ பயணத்துக்கான ரயில் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைத் தர இயலாத பட்சத்தில் அதை தமிழக அரசே மாநிலபேரிடர் நிவாரண நிதியில் இருந்துவழங்கும். அவர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றையும் மாநில அரசே வழங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT