Published : 07 May 2020 02:42 PM
Last Updated : 07 May 2020 02:42 PM

திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கைது: திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, திண்டுக்கல்லில் உள்ள தனது வீடு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் கருப்புச்சட்டை அணிந்து மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் உள்ள வீடு முன்பு திமுக கொறடா அர.சக்கரபாணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் சீலப்பாடியில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனது குடும்பத்தினர், கட்சியினருடன் கருப்புச்சட்டை அணிந்து மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமையில் திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைமுன்பு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலபாரதி உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேடசந்தூர், கொடைக்கானலில் டாஸ்மாக் திறப்பதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான இடங்களில் திமுக வினர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புச்சட்டை அணிந்துநின்று டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x