Published : 07 May 2020 08:22 AM
Last Updated : 07 May 2020 08:22 AM

2 நாட்களில் 30% பேருக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் காமராஜ்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் மே மாதத்துக்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நேற்று பார்வையிட்ட தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. மே மாதத்துக்குரிய ரேஷன் பொருட்கள் 2 நாட்களில் 30 சதவீதம் வரை வழங்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிடங்குகளிலும் 100 சதவீதம் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 85 சதவீத பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைந்து விட்டன என்றார்.

கரோனா ஊரடங்கு காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் 5 அம்மா உணவகங்களில், அதிமுக சார்பில் ஏப்.21 முதல் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மே 4 முதல் மே 17 வரையுள்ள நாட்களிலும் 3 வேளையிலும் விலையில்லாமல் உணவு வழங்க அதிமுக சார்பில் ரூ.1,83,400-க்கான காசோலையை ஆட்சியர் த.ஆனந்திடம் அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x